
120 கோடி வசூலைக் கடந்த முபாசா தி லயன் கிங்
"போட்டோ ரியலிஸ்டிக்கலி அனிமேட்டட்" படமாக வெளிவந்த இந்தப் படம் இந்தியாவில் 120 கோடி வசூலைக் கடந்து வெற்றி பெற்றுள்ளது. 200 மில்லியன் யுஎஸ் டாலர் செலவில் தயாரான இந்தப் படம் உலக அளவில் 470 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது. 2019ல் வெளிவந்த "த லயன் கிங்" இந்தியாவில் 150 கோடி வசூலைப் பெற்றது. அந்த சாதனையை "முபாசா" முறியடிக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.
இந்தியாவில் அதிக வசூலைக் குவித்த ஹாலிவுட் படம் என்ற பெருமையுடன் "அவதார் - தி வே ஆப் வாட்டர்" படம் 390 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!