
பான் இந்தியா படமாக வெளியாகும் அகத்தியா
1940களில் வாழ்ந்த இந்திய விஞ்ஞானி ஒருவர் ஒரு உயர்ந்த கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். இந்த கண்டுபிடிப்பு வெளியில் வந்தால் இந்தியர்களின் மதிப்பு உயர்ந்து விடும் என்று கருதும் ஆங்கிலேய அரசு அந்த விஞ்ஞானியை குடும்பத்தோடு அழித்து விடுகிறது. ஆனாலும் அந்த விஞ்ஞானி அந்த கண்டுபிடிப்பு ரகசியத்தை ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளார். அதனை 2024ல் வாழும் ஒரு பத்திரிகையாளர் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதுதான் கதை.
பேண்டஸி ஹாரர் திரில்லர் வகை கதை. இதில் விஞ்ஞானியாக அர்ஜூனும், இளைஞனாக ஜீவாவும் நடித்திருக்கிறார்கள். வரும் ஜனவரி 31ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.
படம் குறித்து ஜீவா கூறும்போது "ஒரு பேண்டஸி ஹாரர் த்ரில்லரில் பணிபுரிவது முற்றிலும் புதிய அனுபவம். கதை, காட்சிகள், என நிஜ வாழ்வைத் தாண்டி விரியும் பிரம்மாண்ட உலகம் என்பது மிக மிகப் புதிதானது. பிரமிக்க வைக்கும் இந்த உலகத்தை உருவாக்கியதற்காகக் கலை இயக்குநரையும், ஒளிப்பதிவாளரையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். பா.விஜய் கதையைச் சொன்னபோது, இந்த தலைசிறந்த படைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமென விரும்பி உடனே ஒப்புக்கொண்டேன். இப்படம் கண்டிப்பாக மிகப் புதிதான உலகிற்குள் அழைத்துச் செல்லும்.” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!