
ஜனவரி 10 : வணங்கான் ரிலீஸ்
அஜித் நடித்துள்ள "விடாமுயற்சி" படம், ஷங்கர் இயக்கியுள்ள "கேம் சேஞ்சர்" படங்கள் பொங்கலுக்கு வெளியாகின்றன. அதனால், "வணங்கான்" படத்திற்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டது. அதனால், படத்தைத் தள்ளி வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கடந்த வாரம் தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார்கள். "விடாமுயற்சி" படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அப்படமும் பொங்கலுக்கு சில நாட்கள் முன்பாக அடுத்த வாரம் வெளியாகும் எனத் தெரிகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!