
பிளாஷ்பேக் : அப்பா சிவகுமார் அடிவாங்குவதை பார்த்து கதறி துடித்த கார்த்தி
படத்தின் கிளைமாக்ஸில் சிவகுமார் ஒரு பெண்ணை கெடுத்து விட்டதாக கருதும் ஊர் பொதுமக்கள் அவரை தெருவில் ஓடவிட்டு கல்லால் அடிப்பார்கள்.
படத்தின் பணிகள் முடிந்ததும் சிவகுமார் தனது நண்பர்களுக்கு படத்தை போட்டுக் காட்டினார். அந்த சிறப்பு காட்சிக்கு சிவகுமாரின் மகன்கள் சூர்யாவும், கார்த்தியும் வந்திருந்தார்கள். சூர்யாவுக்கு 8 வயது கார்த்திக்கு 6 வயது. கிளைமாக்சில் சிவகுமார் அடிவாங்குவதை பார்த்த கார்த்தி "அப்பாவை அடிக்காதீங்க... அப்பாவை அடிக்காதீங்க" என்று கதறி அழுதார். படம் விட்டு வெளியில் வந்தும் கார்த்தி அழுவதை நிறுத்தவில்லை. கார்த்திக்கிற்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தும் அன்று முழுக்க அழுது கொண்டே இருந்தாராம் கார்த்தி. பின்னர்தான் சினிமா வேறு, நிஜம் வேறு என மகனுக்கு புரிய வைத்தார் சிவகுமார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!