2024ன் கடைசி வாரம்… 10 படங்கள் ரிலீஸ்
டிச 23, 2024
Advertisement
2024ம் ஆண்டு இன்னும் ஒரு வாரத்தில் முடிய இருக்கிறது. இந்த வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான டிசம்பர் 27ம் தேதி சுமார் 10 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. எப்போதுமே கடைசி வாரத்தில் இத்தனை படங்கள் வருவது வழக்கம். அதுபோல் இந்த வருடமும் வெளியாக உள்ளது.
இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள் அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். “அலங்கு, பீமா சிற்றுண்டி, இது உனக்கு தேவையா, கூரன், மழையில் நனைகிறேன், நெஞ்சு பொறுக்குதில்லையே, ராஜாகிளி, திரு மாணிக்கம், த ஸ்மைல் மேன், வாகை” ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றோடு டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று மோகன்லால் இயக்கி நடித்துள்ள "பரோஸ் 3டி" படம், மற்றும் கிச்சா சுதீப் நடித்துள்ள கன்னடப் படமான "மேக்ஸ்" ஆகியவை தமிழில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.
இந்த வாரம் டிசம்பர் 27ம் தேதி வெளியாகும் நேரடி தமிழ்ப் படங்களுடன் இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 230ஐக் கடந்துவிடும். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் 10 படங்கள் குறைவாக வெளியாகி உள்ளது.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!