
பாலா 25 வருட விழா : சூர்யா பிரசன்ட், விக்ரம் ஆப்சன்ட்
இந்த விழாவில் பாலாவின் இயக்கத்தில் நடித்தவர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு சிலரைத் தவிர பலர் விழாவுக்கு வருகை தரவில்லை. பாலா இயக்கிய முதல் படமான "சேது" படத்தின் நாயகன் விக்ரம் வரவில்லை. இருந்தாலும் சூர்யா, அவரது அப்பா சிவகுமார் ஆகியோர் வந்து ஆச்சரியப்படுத்தினார்கள். இத்தனைக்கும் இந்த "வணங்கான்" படத்தில்தான் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
பாலாவின் இயக்கத்தில் நடித்த மற்ற நடிகர்களான விஷால், ஆர்யா, அதர்வா மற்றும் நடிகைகள் யாரும் வரவில்லை. ஒரு சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் மட்டுமே வந்தனர். பாலாவின் இயக்கத்தில் நடிக்காத சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!