
ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் ஜோடியாகும் மிருணாள் தாக்கூர்
சமீபத்தில் இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார் என தகவல் வந்தது. தற்போது இந்த படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிக்க மிருணாள் தாக்கூர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் முதன்முறையாக பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சைப் அலி கான் மற்றும் கரீனா கபூர் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர். பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியரான இவர்கள் இந்த படத்தில் நெகட்டிவ் வேடத்தில் நடிக்கின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!