
1300 கோடி வசூலைக் கடந்த புஷ்பா 2
இப்படம் 10 நாட்களில் 1292 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இன்று 1300 கோடியை தாண்டியது. இப்படம் தெலுங்கில் மட்டும் 210 கோடிக்கு வியாபாரம் நடந்தது. கடந்த பத்து நாட்களில் அந்த வசூல் 270 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இப்போதுதான் "பிரேக் ஈவன்" நிலையை அடைந்துள்ளது. இதற்கு மேல் வசூலாகும் தொகைதான் அங்கு லாபத்தைக் கொடுக்கும்.
அதே சமயம் மற்ற மாநிலங்களில் இப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக வசூலித்துள்ளதால் அங்கெல்லாம் மிகப் பெரிய லாபத்தை ஏற்கெனவே கொடுக்கத் துவங்கிவிட்டது. குறிப்பாக ஹிந்தியில் இப்படத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
"புஷ்பா 2" படம் எப்படியும் 1500 கோடியைக் கடந்துவிடும். இருந்தாலும் "பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்" ஆகிய படங்களின் வசூலை முறியடிக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!