
ஹீரோ ஆனார் ரோபோ சங்கர்
அடுத்தகட்டமாக ரோபோ சங்கர் தற்போது "அம்பி" என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாகி உள்ளார். இந்த படத்தை டி2 மீடியா நிறுவனம் சார்பில் பிரசாந்தி பிரான்சிஸ் தயாரிக்கிறார். பாஸர் ஜே. எல்வின் இயக்குகிறார். ரோபோ சங்கருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார்.
மற்றும் ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். வெற்றிவேல் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். கன்னட இசை அமைப்பாளர் ஏ.பி. முரளிதரன் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!