சிவகார்த்திகேயன் சம்பளம் அதிரடி உயர்வு ?
டிச 13, 2024
Advertisement
"அமரன்" படம் மூலம் 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற சிவகார்த்திகேயன் தற்போது சில ஹீரோக்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு டாப் 5 இடத்தைப் பிடித்துவிட்டதாக வினியோகஸ்தர்களே தெரிவிக்கிறார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் அவர் இருக்கிறார் என்கிறார்கள்.
"அமரன்" படம் தந்த வெற்றி, வசூலை அடுத்து தன்னுடைய அடுத்த படங்களுக்கான சம்பளத்தை அவர் அதிரடியாக உயர்த்திவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள "புறநானூறு" படத்திற்காக 50 கோடி சம்பளம் என்றும், அடுத்து "டான்" படத்தை இயக்கிய சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு 60 கோடி சம்பளம் என்றும் சொல்கிறார்கள்.
300 கோடி வரை அதிகபட்ச வியாபாரம் 100 கோடி மினிமம் கியாரண்டி வியாபாரம் என்று சிவகார்த்திகேயனுக்கு இருப்பதால் அவருடைய சம்பள உயர்வு சரியானதே என்பது கோலிவுட் தகவல்.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!