
பிளாஷ்பேக்: 80 வருடங்களுக்கு முன்பே வரதட்சனை மாப்பிள்ளைகளை வேட்டையாடிய ஹீரோயின்
படத்தின் கதை இதுதான்: வரதட்சணை கொடுக்க முடியாததால் ஏழைப்பெண் ராஜத்துக்கு (ருக்மணி), திருமணமாகவில்லை. இதற்கிடையே பண ஆசை கொண்ட கந்துவட்டிக்காரன், ராஜமின் தந்தையைக் கொன்று வீட்டுக்கு தீ வைக்கிறான். இதனால் ஆவேசம் கொள்ளும் ராஜம், வரதட்சணைக்கு எதிராகக் களமிறங்குகிறாள். வரதட்சணை கேட்கும் மணமகன்கள் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள்.
வரதட்சணையால் பாதிக்கப்பட்ட ராஜம் தனது பெயரை (ஜெ)ஜயக்கொடி என்று மாற்றிக் கொண்டு பெண் தீவிரவாதியாகி வரதட்சணை கேட்கிறவர்களுக்கு தானே தண்டனை தருவதுதான் படத்தின் கதை. பிற்காலத்தில் வந்த "நான் சிவப்பு மனிதன்", "சட்டம் ஒரு இருட்டரை" போன்ற படங்களுக்கு இதுதான் முன்னோடி. படத்தின் கதையை பார்த்து மக்கள் மிரண்டு போனார்கள். ருக்மணி அதிரடி ஆக்ஷன் ஹீரோயின் ஆனார். நாயகனாக நடித்த கே.நடராஜன் பின்னர் ஜயக்கொடி நடராஜன் ஆனார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!