
கூலி படத்தின் ‛சிக்கிட்டு வைப்: ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த படக்குழு
கூலி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று (டிச.,12) ரஜினிகாந்த் தனது 74வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு படம் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, ‛சிக்கிட்டு வைப்" என்ற பாடல் டீசரை வெளியிட்டுள்ளனர். இதில் ரஜினியின் நடனத்தை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இதற்கிடையே ஜெய்ப்பூரில் கூலி படப்பிடிப்பு நடந்து வரும் சூழலில் அங்கு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி படக்குழு உடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் ரஜினி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!