
பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய கிளிஞ்சல்கள்
முதன் முறையாக முழு திரையில் மோகன் என தனித்து பெயர் வெளியிடப்பட்டது "கிளிஞ்சல்கள்" படத்தில்தான். இதற்கு முன்பு மோகன் நடித்த படங்கள் வெற்றிப் படங்கள் என்றாலும் கிளிஞ்சல்கள்தான் முதல் வெள்ளி விழா படம். மோகன் ஜோடியாக பூர்ணிமா நடித்தார். இவர்களுடன் திலீப், வி.கே.ராமசாமி, வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்தனர். துரை இயக்கினார்.
இந்து இளைஞனுக்கும், கிறிஸ்தவ பெண்ணுக்கும் இடையிலான காதலை பேசிய படம். "காதலர்கள் தோற்கலாம். காதல் தோற்பதில்லை" என்ற படம். முதன் முதலாக டி.ராஜேந்தர் இசை அமைத்த வெளியான படம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. கிளிஞ்சல்கள் இப்போதும் காதலர்களின் பேவரேட் படமாக இருக்கிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!