
காந்தாரா சாப்டர் 1 படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம்
ஏற்கனவே காந்தாரா 2ம் பாகம் "காந்தாரா சாப்டர் 1" எனும் பெயரில் உருவாகி வருகிறது. இதன் பெரும்பாலான படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்றது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லாலுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் ஏதோ ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் மோகன்லால் நடிக்கவில்லையாம். அவருக்கு பதிலாக மலையாள நடிகரான ஜெயராம் தற்போது இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!