
ராகவா லாரன்ஸிற்கு வில்லனாகும் மாதவன்
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படம் "பென்ஸ்" . லோகேஷ் கதையில் உருவாகும் இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கின்றார்.
எல்.சி.யுவின் கதைகளத்தை மையப்படுத்தி தான் இப்படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில் இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாதவனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாதவன் இதற்கு முன்பு தமிழில் ஆயுத எழுத்து படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!