சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகல்
டிச 09, 2024
Advertisement
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா கதாநாயகனாக நடிக்கும் அவரது 45வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோயம்பத்தூரில் ஆரம்பமானது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அப்படத்திலிருந்து அவர் திடீரென விலகியிருக்கிறார்.
அவருக்குப் பதிலாக சாய் அபயங்கர் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். பின்னணிப் பாடகர் திப்பு, பாடகி ஹரிணி ஆகியோரின் மகன்தான் சாய் அபயங்கர். "கட்சி சேரா" என்ற அவரது ஆல்பம் இந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இசைத் தளங்களில் அதிகம் கேட்கப்பட்ட பாடலாக அது அமைந்துள்ளது.
ஏற்கெனவே "பென்ஸ்" என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது சூர்யாவின் 45வது படத்திற்கும் இசையமைப்பாளராகப் பணியாற்ற உள்ளார்.
ஏஆர் ரஹ்மான் திடீரென விலகியதற்கான காரணம் என்ன என்பதை படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!