
வேலைக்காரியா என் மனைவி? - கொந்தளிக்கும் பாலா
திருமணமான கையோடு கொச்சியில் இருந்து வைக்கம் நகருக்கு தனது வசிப்பிடத்தை மாற்றிய பாலா தயவுசெய்து எனக்கு கொடுத்த அதே ஆதரவை எனது மனைவி கோகிலாவுக்கும் தரவேண்டும் என ரசிகர்களிடம். கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இவரது பல திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள், இந்த புதிய திருமணம், இந்த ஜோடிக்கான அதிக வயது வித்தியாசம் என பல விஷயங்களில் சமூக வலைதளங்களில் பலரும் இவர்களை கிண்டல் அடித்து வந்தனர்.
சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியான ஒரு வீடியோவில் பாலாவின் தற்போதைய மனைவி அவரது மாமாவின் மகள் அல்ல என்றும் அவரது வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்ணின் மகள்தான் என்பது போன்றும் ஒரு செய்தி இடம் பெற்று இருந்தது. சோசியல் மீடியாவில் வைரலான இந்த செய்தியை பார்த்த பாலா கடும் கோபம் அடைந்துள்ளார்.
இது குறித்து பதிலடி கொடுக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “என் மனைவியை எப்படி வேலைக்காரி என்று நீங்கள் சொல்லாம். அந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது ? இதே நான் உங்கள் மனைவியை அப்படி சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும் ? என் மனைவியின் தந்தை அரசியலில் பிரபலமான ஒரு நபர். நான் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க தயாரான போது வேண்டாம் விட்டுவிடுங்கள் இதை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டார். ஆனாலும் இப்படி ஒரு செய்தியை பரப்பியதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மட்டும் உறுதி” என்று கூறியுள்ளார் பாலா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!