
சசிகுமார், சிம்ரன் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி : அசத்தும் டைட்டில் டீசர்
இந்த படத்தை குட் நைட், லவ்வர் போன்ற படங்களைக் தயாரித்த மில்லியன் டாலர் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கின்றார். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு " டூரிஸ்ட் பேமிலி" என தலைப்பு வைத்துள்ளதாக டைட்டில் டீசருடன் அறிவித்துள்ளனர். இந்த டீசரே அசத்தலாக உள்ளது.
இலங்கையில் இருந்து சசிகுமார், சிம்ரன் மற்றும் அவரது இரு மகன்கள் ஆகியோர் இரவோடு இரவாக குடும்பத்தோடு வேறு ஒரு இடத்திற்கு செல்ல தயாராகும் நிகழ்வுகளை காமெடியாக சொல்லி உள்ளனர். சசிகுமார், சிம்ரனின் இலங்கை தமிழ் மற்றும் காட்சியோடு வரும் நகைச்சுவை ஆகியவை ரசிகர்களை கவர்ந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!