
புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல்
நேற்றைய முதல் நாள் வசூல் மட்டும் உலக அளவில் சுமார் 200 கோடியைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். சில தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் இணையதளங்கள் 250 கோடியைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது என்றும் செய்தி வெளியிட்டுள்ளார்கள். இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் சொல்வதுதான் அதிகாரப்பூர்வமானது. எப்படியும் இன்னும் சில மணி நேரங்களில் தயாரிப்பு நிறுவனம் அதை அறிவித்துவிடும். அதுவரையிலும் அவரவர் விருப்பப்படி 200 கோடி, 250 கோடி என்று சொல்வார்கள்.
உலக அளவில் எவ்வளவு வசூலிக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், தெலுங்கைப் பொறுத்தவரையில் நிச்சயம் புதிய வசூல் சாதனை என்பது மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும் என தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!