
காதலர் குடும்பத்துடன் படம் பார்த்த ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா கதாநாயகியாக நடித்த "புஷ்பா 2" படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. அப்படத்தைத் தனது காதலர் விஜய் தேவரகொன்டா குடும்பத்துடன் ஹைதராபாத்தில் பார்த்து ரசித்தார் ராஷ்மிகா. விஜய் தேவரகொன்டாவின் அம்மா மாதவி, சகோதரர் நடிகர் ஆனந்த் ஆகியோர் படத்தைப் பார்த்தனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன.
முக்கியமான நாட்களில் விஜய் தேவரகொன்டா குடும்பத்தாருடன் ராஷ்மிகா தங்குவது வழக்கம். தீபாவளி பண்டிகையைக் கூட அவர்களுடன்தான் கொண்டாடினார். தற்போது தனது புதிய பட வெளியீட்டையும் அவர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!