
தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த அமரன்
நாளை இப்படம் ஓடிடியில் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. அதனால், பெரும்பாலான தியேட்டர்களில் இன்றே கடைசி நாளாக முடிவுக்கு வருகிறது. இதனிடையே, இப்படத்தைத் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் தியேட்டர்களுக்குச் சென்று பார்த்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு அதிகம் பேர் தியேட்டர்களில் பார்த்த படமாக இந்தப் படம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. விஜய் நடித்து வெளிவந்த "தி கோட்" படம் சில லட்சம் பேர் கூடுதலாகப் பார்த்ததாகப் பதிவாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கியமான இடத்தை இந்த "அமரன்" படம் பிடித்துள்ளது.
தியேட்டர்களில் கிடைத்த வரவேற்பைப் போலவே ஓடிடி தளத்திலும் இப்படம் அதிகம் பேரால் பார்க்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!