
புஷ்பா 2 - 3டி ரிலீஸ் தள்ளி வைப்பு ?
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள "புஷ்பா 2" படம் நாளை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படம் 2டி, 3டி, 4டிஎக்ஸ், ஐமாக்ஸ், ஆகிய வடிவங்களில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது "3 டி" ரிலீஸைத் தள்ளி வைத்துள்ளார்களாம்.
படத்தின் வேலைகள் கடைசி நேரம் வரை நடந்ததால் "3 டி" வேலைகளை திட்டமிட்டபடி முடிக்கவில்லையாம். எனவே, ஒரு வாரம் தள்ளி வைத்து அடுத்த வாரம் டிசம்பர் 13ல் "3 டி"யில் வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம். பல தியேட்டர்களில் "3 டி"க்கான முன்பதிவு ஏற்கெனவே ஆரம்பமாகிய நிலையில் தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது.
3 டி-யில் படத்தைப் பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தைத் தந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!