
ஸ்ரீலீலாவை ஓவர் டேக் செய்த ராஷ்மிகா மந்தனா
முதல் பாகத்தில் "ஊ சொல்றியா மாமா" பாடலுக்கு பிரபல கதாநாயகியான சமந்தா ஒரு கிளாமர் நடனமாடினார். அது போலவே இரண்டாம் பாகத்தில் தெலுங்கில் மட்டும் பிரபலமான கதாநாயகி ஸ்ரீலீலா "கிஸ்ஸிக்" என்ற பாடலுக்கு கிளாமர் நடனமாடியுள்ளார்.
இதனிடையே, படத்தின் மற்றொரு பாடலான "பீலிங்ஸ்" பாடல் நேற்று வெளியானது. அப்பாடலில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடனமாடியுள்ளனர். நடனத்தில் சிறந்து விளங்குபவர் அல்லு அர்ஜுன். அவருக்குப் போட்டியாக ராஷ்மிகாவும் அதிரடியாக ஆடியுள்ளார். அது மட்டுமல்ல அவரது ஆடையிலும் கிளாமர் அதிகமாக உள்ளது. மேலும், நடனத்தில் உள்ள சில அசைவுகள் ஆபாசமாக இருப்பதாகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஒரு பாடலுக்கு ஸ்ரீலீலாவை ஆட வைத்ததற்குப் பதிலாக அந்தப் பாடலுக்கும் ராஷ்மிகாவையே நடனமாட வைத்திருக்கலாமே என்பதும் சிலரது கமெண்ட்டாக உள்ளது. "கிஸ்ஸிக்" பாடலை விடவும் இந்த "பீலிங்ஸ்" பாடலுக்கு தெலுங்கு ரசிகர்கள் தியேட்டர்களை ரணகளமாக்குவார்கள் என அங்குள்ள விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!