
குட் பேட் அக்லீ படத்திற்காக 8 கிலோ எடையை குறைத்த அஜித்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் "குட் பேட் அக்லி" என்கிற படத்தில் நடித்து வருகின்றார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார். இதில் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பை பெரும்பாலும் வெளிநாடுகளில் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து லீக் ஆன சில காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அஜித் இந்த படத்திற்காக 8 கிலோ எடையை குறைத்து நடித்து வருகிறார் என்கிறார்கள். இது அஜித்தின் சமீபத்தில் வெளிவந்த புகைப்படம் மூலம் உறுதியாக தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!