
அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன்
அதன்படி, "அஜித்திற்கு "நானும் ரவுடி தான்" படம் மிகவும் பிடித்திருந்தது. அந்த சமயத்தில் அவரை நான் சந்தித்தபோது, நான் நிறைய படங்களை பார்ப்பதில்லை. ஆனால், நானும் ரவுடிதான் படத்தை நிறைய முறை பார்த்திருக்கிறேன். குறிப்பாக பார்த்திபன் கதாபாத்திரம் நன்றாக இருந்தது. அப்படியான ஒரு கதாபாத்திரத்தை வைத்து ஒரு ஸ்கிரிப்டை கொண்டு வாருங்கள். நாம் படம் பண்ணுவோம் என்றார். அதன் பின்னர் சொன்னபடியே ஒருநாள் அவர் என்னை தொடர்பு கொண்டு உங்கள் ஸ்டைலில் ஒரு படம் பண்ணலாம் என்றார்.
இது ஒரு பகுதி என்றால், மறுபுறம் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு முற்றிலுமாக வேறு மாதிரி சிந்தனைகள் இருந்தது. ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்கும் போது இதெல்லாம் இருக்க வேண்டும் என விதிகளை வைத்திருந்தனர். எனக்கு அது எதுவும் புரியவில்லை. நான் கதை எழுதும்போதே இப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதை மாற்றியமைத்து தான் எழுதுவேன். என்னுடைய ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட மலையாளத்தில் வெளிவந்த "ஆவேஷம்" படத்தை போன்றது.
நானும் பல மாஸ் தருணங்களை வைத்து தான் அந்த படத்தின் ஸ்கிரிப்டை எழுதினேன். அதை நான் தயாரிப்பாளர்களிடம் சொன்னபோது, அவர்கள், என்ன ரொம்ப காமெடியா இருக்கு என சொன்னார்கள். எமோஷனலோ, கருத்தோ இல்லை என்றார்கள். இது தான் அந்த படத்தில் இருந்து நான் வெளியேறியதற்கான காரணம்" என தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!