
யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே
படம் பற்றி இயக்குனர் முருகேஸ்வர காந்தி கூறியதாவது : நல்ல கதைக்களம் கொண்ட மிகப்பெரிய காமெடி திருவிழாவாக மட்டுமின்றி, மக்களை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்ககூடிய திரைப்படமாக உருவாகும் படம். யோகி பாபு கதையின் நாயகனாக வைத்து நாங்கள் தயாரிக்கும் முதல் படமான "பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே" குடும்பத்துடன் பார்க்க கூடிய காமெடி கமர்ஷியல் படமாக இருக்கும். படத்தின் தலைப்பில் சர்ச்சை இருப்பதாக நான் கருதவில்லை. கதைக்கு பொருத்தமான தலைப்பு. தலைப்பிற்குரிய கண்ணியத்தை படம் காக்கும். என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!