
பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை
1939ம் ஆண்டு வெளிவந்த "பிரஹ்லாதா" என்ற படத்தின் நாயகியாக எம்.ஆர்.சந்தான லட்சுமி நடித்தார். நாயகன் டி.ஆர்.மகாலிங்கம். இந்த படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பிரஹலாதாவாக நடித்தார். அவரது தாயாக என்.ஆர்.சந்தானலட்சுமி நடித்தார். எம்ஜிஆர் இந்திரனாக நடித்தார். கதைப்படி பிரஹலாதாவை இந்திரனிடமிருந்து காப்பாற்ற அவரது தாய் இந்திரனோடு போர்புரிய வேண்டும். அந்த காட்சியில் சந்தான லட்சுமி எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்டார். இந்த சண்டை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
எம்.ஆர்.சந்தான லட்சுமி கும்பகோணத்தை சேர்ந்தவர். 1935ம் ஆண்டு "ராதா கல்யாணம்" என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் சந்திரகாசன், அம்பிகாபமதி, ஆரியமாலா, மனுநீதி சோழன், ஜெகதல பிரதாபன், மதுரை வீரன், மனம் போல் மாங்கல்யம், புதையல் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 1956ம் ஆண்டில் தனது 52வது வயதில் காலமானார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!