சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சூர்யா - சிவா வழிபாடு
Advertisement
Advertisement
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சூர்யா - சிவா வழிபாடு
நவ 21, 2024
அ நிறம் | அளவு
Advertisement
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து நவ., 14ம் தேதி திரைக்கு வந்த படம் கங்குவா. இப்படம் திரைக்கு வந்த பின் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. என்றாலும் படம் கையை கடிக்காமல் போட்ட காசை எடுத்து விடலாம் என்று நம்பிக்கையில் படக்குழு இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா, இயக்குனர் சிவா ஆகிய இருவரும் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா, அடுத்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!