
குட் பேட் அக்லி பொங்கல் ரிலீஸ் : தள்ளிப்போகும் விடாமுயற்சி
அதன் பிறகு ஆரம்பிக்கப்பட்ட "குட் பேட் அக்லி" படத்தை 2025 பொங்கல் ரிலீஸ் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், அதன் பிறகு வெளியான அப்டேட்டுகளில் அந்த ரிலீஸ் பற்றி எதுவுமே குறிப்பிடாமல் தவிர்த்தார்கள். இந்நிலையில் வினியோகஸ்தர்களிடம் 2025 பொங்கலுக்கு படத்தை வெளியிடுகிறோம் என தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
"விடாமுயற்சி" படத்தை அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிடலாம் எனச் சொல்கிறார்கள். 2025 பொங்கலுக்கு பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள "வணங்கான்" படமும் வெளியாக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள தெலுங்குப் படமான "கேம் சேஞ்சர்" படமும் தமிழில் டப்பிங் ஆகி வர உள்ளது. விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன்" படமும் பொங்கல் ரிலீஸ்தான் எனச் சொல்கிறார்கள். கார்த்தி நடித்துள்ள "வா வாத்தியார்" படமும் பொங்கலுக்கு வெளியாகலாம். வெகு விரைவில் எந்தெந்த படங்கள் பொங்கல் வெளியீடு என்பது உறுதியாகத் தெரிந்துவிடும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!