
டிடிஎப் வாசன் நடிக்கும் ஐபிஎல்
இந்த நிலையில் வாசன் "ஐபிஎல்" (இந்தியன் பீனல் லா - இந்திய தண்டனை சட்டம்) என்ற படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் உதவியாளர் கருணாகரன் இயக்குகிறார். இப்படத்தில் "ஆடுகளம்" கிஷோர், அபிராமி, குஷிதா, சிங்கம்புலி, ஆடுகளம் நரேன், ஹரீஷ் பேரடி, போஸ் வெங்கட் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கருணாகரன் கூறும்போது “நாட்டில் நடைபெறும் திடுக்கிடும் சில குற்றங்களை நாம் செய்தித்தாள்களில் படித்து விட்டு சில தினங்களில் மறந்து விடுகிறோம். ஆனால் அந்த சம்பவங்களில் சிலவற்றின் பின்னால் வெளியில் தெரியாத அரசியல் காரணங்கள் உள்ளன. அதனால் சாதாரண அப்பாவி மனிதர்களும் பாதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்யாத தவறுக்காக ஒரு குடும்பம் எப்படி அரசியல் சூழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து வெளியில் வருவதற்காக என்ன செய்கிறார்கள், அவர்களால் வெளியில் வர முடிந்ததா என்பதே படத்தின் கரு” என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!