
நயன்தாரா டாகுமென்டரியில் நானும் ரௌடிதான் படப்பிடிப்பு காட்சிகள்
அதன்படி இன்று நவம்பர் 18ம் தேதி வெளியாகி உள்ளது. இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த டாகுமென்டரியின் டிரைலரில் "நானும் ரௌடிதான்" படத்தின் 3 வினாடி படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி சேர்த்ததற்காக அதன் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தரப்பிலிருந்து நடிகை நயன்தாராவிற்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் நயன்தாரா. இந்த விவகாரம் திரையுலகில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிரைலரில் இடம் பெற்ற 3 வினாடி படப்பிடிப்பு காட்சிகளுக்கே 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இன்று வெளியான டாகுமென்டரியில் சுமார் 10 வினாடி "நானும் ரௌடிதான்" படப்பிடிப்பு காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 3 வினாடிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய தனுஷ், இந்த 10 வினாடி காட்சிகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பது இனிமேல்தான் தெரிய வரும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!