
முத்தையா இயக்கத்தில் அருள்நிதி!
குட்டிப் புலி, கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. அதன் பிறகு அவரது இயக்கத்தில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
கடந்த சில மாதங்களாக முத்தையா அடுத்து நடிகர் அருள்நிதியை வைத்து புதிய படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், எந்தவித அறிவிப்பின்றி தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். இப்படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றனர். திரையரங்குகளில் வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!