
மீண்டும் அஜித் - சிவா கூட்டணி வி தலைப்புகளைத் தேடும் ரசிகர்கள்
"கங்குவா 2" படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் கேட்ட போது, “இயக்குனர் சிவா, அடுத்து அஜித் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். அதற்குப் பின் அடுத்த ஆண்டு மத்தியிலோ, கடைசியிலோ "கங்குவா 2" ஆரம்பமாகும்,” என்றார்.
"விடாமுயற்சி, குட் பேட் அக்லி" படங்களை முடித்த பின் சிவா இயக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார் என்பது அஜித் ரசிகர்களுக்கான உறுதியான தகவலாக நேற்று கிடைத்தது. அஜித் - சிவா கூட்டணியில் வந்த படங்கள் நான்கிற்கும் "வி" என்ற எழுத்தில் ஆரம்பமாகும் தலைப்புதான் வைக்கப்பட்டிருந்தது. அதனால், அவர்களது அடுத்த படத்திற்கும் அது போலவே "வி" என்ற தலைப்புதான் வைப்பார்கள் என ரசிகர்களே முடிவு செய்துவிட்டார்கள்.
எனவே, சமூக வலைத்தளங்களில் நேற்றிலிருந்து "வி" என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பல தலைப்புகளை ரசிகர்களே சொல்லி வருகிறார்கள். அதில் சீரியசான தலைப்புகளும் உண்டு, டிரோல் செய்யப்படும் தலைப்புகளும் உண்டு.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!