அப்பாவை இயக்கி உள்ள உமாபதி ராமய்யா
நவ 16, 2024
Advertisement
சாட்டை, அப்பா, விநோதய சித்தம் படங்களில் சமுத்திரகனி, தம்பி ராமய்யா காமினேஷன் ஒர்க்கவுட் ஆனது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது "ராஜாகிளி". இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள தம்பி ராமையா, அவரது மகன் உமாபதி ராமையாவை இயக்குனராக்கி உள்ளார்.
இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தம்பி ராமய்யாவே இசை அமைத்துள்ளார். அவரே பாடல்களையும் எழுதி உள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஒரு நடுத்தர மனிதனின் சபலபுத்தியால் ஏற்படும் பிரச்னைகளை காமெடியாக சொல்லும் படமாக உருவாகி உள்ளது. வருகிற 29ம் தேதி வெளியாகிறது.
ஆரம்பத்தில் மகனை ஹீரோவாக்க முயற்சித்தார். அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி படங்களில் உமாபதி நடித்தார். இந்த படங்கள் வரவேற்பை பெறாத நிலையில் மகனை இயக்குனராக்கி இருக்கிறார் தம்பி ராமய்யா. அப்பா இயக்குனராக இருந்து நடிகர் ஆனார். மகன் நடிகராக இருந்து இயக்குனராகி இருக்கிறார். சமீபத்தில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவை உமாபதி திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா தற்போது அப்பாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!