
ஏ சான்றிதழ் படத்தில் 4 ஹீரோயின்கள்
படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. படம் குறித்து சதீஷ்குமார் கூறியதாவது: இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான திரில்லர் ஆகும். பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் படம். இன்றைய காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும் அவர்கள் எவ்வாறு அவற்றை கடந்து வருவது என்பது குறித்தும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் அலசும். பல பெண்களின் வாழ்க்கையை பேசும் படம் என்பதால் ரச்சிதா, சாக்ஷி, காயத்ரி, சாந்தனி என 4 ஹீரோயின்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள். தணிக்கை குழு "ஏ" சான்றிதழ் கொடுத்துள்ளது. சமுதாயத்திற்கு தேவையான துணிச்சலான கருத்துடன் உருவாகியுள்ள "ஃபயர்", வயது வந்த அனைவரும் கட்டாயம் காண வேண்டிய படம். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!