
பிளாஷ்பேக் : அமிதாப் பச்சனை மிஞ்சிய சிவாஜி
இந்த படத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகு "விஸ்வரூபம்" என்ற பெயரில் ரீமேக் செய்தார் ஏ.சி.திருலோகசந்தர். இதில் சிவாஜி கணேசன் அமிதாப் நடித்த தந்தை, மகன் கேரக்டர்களில் நடித்தார். படமும் பெரிய வெற்றி பெற்றது. ஹிந்தி படம் போன்று பிரமாண்டமாக படம் உருவாகவில்லை என்றாலும் சிவாஜியின் நடிப்புக்காக படம் வெற்றி பெற்றது. அமிதாப்பச்சனை விட சிவாஜி பிரமாதமாக நடித்திருந்தாக அன்றைக்கு பாராட்டினார்கள். அமிதாப் பச்சனே இதனை பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.
படத்தில் ஸ்ரீதேவி, மேஜர் சுந்தர்ராஜன், வி.எஸ்.ராகவன், ஆர்.எஸ்.மனோகர், தேங்காய் சீனிவாசன், மனோரமா உள்பட பலர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்திருந்தார், பத்மாலயா பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!