
கங்குவா வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு
அடுத்து சென்னை உயர்நீதிமன்ற சொத்தாட்சியர் தொடர்ந்த வழக்கில் இன்று நவம்பர் 13ம் தேதிக்குள் 20 கோடியை செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் "தங்கலான்" பட வெளியீட்டிற்கு முன்பாக வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் "கங்குவா" வெளியீட்டிற்கு முன்பு ஒரு கோடியை செலுத்தியதால் படத்தை வெளியிட தடையில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11ம் தேதிக்குள் 3 கோடி செலுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளார்கள். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ஏற்கெனவே 10 கோடியே 35 லட்ச ரூபாயை டெபாசிட் செய்ததையும் நீதிபதிகளில் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பியூயல் டெக்னாலஜிஸ் தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு வழங்க வேண்டிய அசல் தொகையில் மீதமுள்ள 1 கோடியே 60 லட்ச ரூபாயை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் செலுத்தியதால் அந்த வழக்கிலும் "கங்குவா" பட வெளியீட்டிற்குத் தடையில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், வழக்குகளின் சிக்கல்களிலிருந்து விடுவிக்கப்பட்டதால் "கங்குவா" படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!