
மாளவிகா மேனனுக்கு போன் டார்ச்சர் கொடுத்த இளைஞர் கைது
""வலைதளத்தில் கண்ணியமற்ற முறையில் அவதூறு பரப்புகின்றனர். யாரை பற்றியும் இழிவாக பேசலாம் என்று நினைக்கிறார்கள். நான் அணியும் ஆடைகள் பற்றியும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள்"". என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து கேரள மாநில சைபர் கிரைம் போலீசிடமும் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மாளவிகாவுக்கு போன் டார்ச்சர் கொடுத்து வந்த அட்டப்பாடியை சேர்ந்த ஸ்ரீஜித் என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!