
அமரன் தாறுமாறு ஓட்டம் :கங்குவா படத்திற்கு புதிய சிக்கல்?
இதனிடையே, சூர்யா நடித்துள்ள பிரம்மாண்டப் படமான "கங்குவா" படம் நவம்பர் 14ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. ஆனால், தற்போது வரை தமிழகத்தில் படம் வெளியாக இன்னும் மூன்றே நாட்கள் உள்ள நிலையில் இன்னும் ஆன்லைன் முன்பதிவு பெரும்பாலான தியேட்டர்களில் ஆரம்பமாகாமல் உள்ளது சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
"கங்குவா" படத்திற்கான தியேட்டர் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக போடப்படவில்லையாம். பேச்சுவார்த்தை அளவிலேயே போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்கள். வழக்கமாகக் கேட்கும் சதவீதத்தை விட தயாரிப்பு நிறுவனம் அதிகமாகக் கேட்பதும் ஒரு காரணம் என்று சொல்கிறார்கள். அதோடு, "அமரன்" படம் நன்றாக போய்க் கொண்டிருப்பதால் அப்படத்தைத் தூக்கிவிட்டு "கங்கவா" படத்தைப் போட பல தியேட்டர்காரர்கள் தயங்குகிறார்களாம்.
இந்த சிக்கலை "கங்குவா" தயாரிப்பு நிறுவனம் எப்படி ஓரிரு நாளில் தீர்க்கப் போகிறது என திரையுலகில் காத்திருக்கிறார்கள். கடந்த வாரம்தான் இப்படத்திற்கு தடை கேட்ட வழக்கை செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தி முடித்து வைத்தார்கள். இப்போது இந்த சிக்கல் வந்து நிற்கிறது. மேலும், அடுத்த நான்கைந்து நாட்களுக்கு தமிழகத்தில் கடும் மழை பெய்யும் என வானிலை ஆர்வலர்கள் சொல்லி வருகிறார்கள். அதுவும் "கங்குவா" வசூலை பாதிக்கவும் வாய்ப்புள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!