
அமரன் வசூல் ரூ.250 கோடியைக் கடக்கும்! - பாக்ஸ் ஆபீஸ் தகவல்
கடந்த வாரம் நான்கு நாட்கள் மிகவும் சிறப்பாக இருந்த வசூல், அதன்பின் வார நாட்களில் மாலை, இரவுக் காட்சிகளில் சிறப்பான வரவேற்புடன் ஓடியது. நேற்றும், நேற்று முன்தினமும் விடுமுறை நாட்கள் என்பதால் மீண்டும் அனைத்து காட்சிகளுக்குமே குறிப்பிடத்தக்க வசூல் இருந்துள்ளது.
200 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் 250 கோடி வசூலை நிச்சயம் கடந்துவிடும் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் மட்டும் 25 கோடி மொத்த வசூலைக் கடந்து சுமார் 10 கோடி லாபத்தைக் கொடுத்துள்ளது. அமெரிக்காவில் 15 லட்சம் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது. இந்த இரண்டு வசூல் நிலவரமும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெரிய மார்க்கெட்டை உருவாக்கித் தந்துள்ளது.
சூர்யா நடித்துள்ள "கங்குவா" படம் இந்த வாரம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில் பல தியேட்டர்களில் "அமரன்" படத்தைத் தூக்கிவிட்டு அதற்குப் பதிலாக "கங்குவா" படத்தைத் திரையிட தயங்குவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!