
படங்களின் தோல்வி குறித்து கவலைப்பட்டதில்லை : பூஜா ஹெக்டே
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாகவே நடிக்கிறேன். என்றாலும் பல சமயங்களில் அந்த படங்கள் தோல்வி அடைந்து விடுகிறது. ஆனால் படங்களின் தோல்வியை பார்த்து ஒருபோதும் நான் கவலைப்பட்டதில்லை. என்னுடைய வேலையை சரியாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அந்த வகையில் நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் எனது கதாபாத்திரத்தில் 100% நடிப்பை வெளிப்படுத்துகிறேன். அதன் வெளிப்பாடாகத்தான் நடித்த படங்கள் தோல்வி அடைந்தபோதும் என் திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து இயக்குனர்கள் எனக்கு பட வாய்ப்புகளை கொடுத்து வருகிறார்கள். இப்போதும் என் கைவசம் ஐந்து மெகா படங்கள் இருப்பதற்கு காரணமே என் திறமை மீது இயக்குனர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்று கூறியிருக்கிறார் பூஜா ஹெக்டே.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!