
ஓடிடியில் வந்தது வேட்டையன்: தாமதமாகும் லால் சலாம் ஓடிடி ரிலீஸ்
படத்தின் கதையம்சம் சிறப்பாக இருந்தது என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் ரஜினிகாந்த்தின் முழுமையான படமாக இல்லை என்ற குறையும் இருந்தது. இருப்பினும் ஓடிடி தளத்தில் சிறப்பான கதையம்சம் கொண்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுவது வழக்கம். அப்படி ஒரு வரவேற்பு இந்தப் படத்திற்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 10ம் தேதி வெளியான "வேட்டையன்" படம் நான்கே வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டது. ஆனாலும், ரஜினிகாந்த் முக்கிய தோற்றத்தில் நடித்து பிப்ரவரி 9ம் தேதி வெளியான "லால் சலாம்" படம் ஒன்பது மாதங்களாகியும் இன்னும் ஓடிடி தளத்தில் வெளியாகாமல் உள்ளது.
செப்டம்பர் மாதமே இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அப்படத்தின் படப்பிடிப்பு நடந்த போது "ஹார்ட் டிஸ்க்"ல் காணாமல் போன காட்சிகளைத் தேடி எடுத்துவிட்டதாகவும், அவற்றுடன் சேர்த்து புதிதாக எடிட் செய்யப்பட்ட படமாக ஓடிடியில் வரும் என்றும் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனாலும் அதன்பின் அது குறித்த அப்டேட் எதுவும் இதுவரையிலும் வெளியாகவில்லை.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!