
கனவுகள் உயிர்பெறுவதை பார்ப்பேன்: கமலுக்கு ஸ்ருதி நெகிழ்ச்சி வாழ்த்து
கமல்ஹாசனுக்கு இன்று 70வது பிறந்த நாள். இதை முன்னிட்டு அவரது மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தனது தந்தையுடன் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் கைகோர்த்து நடந்து செல்லும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவர், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. நீங்கள் ஒரு அபூர்வம். உங்கள் பக்கத்தில் நடப்பது வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இன்னும் பல பிறந்தநாள் மற்றும் உங்கள் மாயாஜால கனவுகள் அனைத்தும் உயிர்ப்பிக்கப்படுவதைப் பார்ப்பேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன் அப்பா" என்று எழுதியுள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!