
தண்டேல் பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
நவ 06, 2024
Advertisement
கார்த்திகேயா பட இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் தெலுங்கில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் படம் "தண்டேல்". கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மீனவர்கள் சமூகத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது என படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து அறிவித்துள்ளனர்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!