
பிளாஷ்பேக் : 80 ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமை கொடுமை பற்றி பேசிய படம்
இந்த படத்தில் பாபநாசம் சிவன் இசையில் ஏ.என்.கல்யாண சுந்தரம் எழுதிய "ஜெய ஜெய வந்தே மாதரம்" பாடல் இடம் பெற்றது. இந்த பாடல் தேசிய கீதத்திற்கு முந்தைய தேச பக்தி பாடலாக பிரபலமானது. மகாத்மா காந்தி, நேரு, பாரதியார் போன்றவர்கள் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்ததையும் இந்த படம் காட்சிகளாக பதிவு செய்தது. ஆனால் இந்த படத்தின் பிரதிகள் எதுவும் தற்போது இல்லை. பாட்டு புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு சில புகைப்படங்களே தற்போது எஞ்சி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!