
லாரன்ஸ் பிறந்த நாளில் எல்.சி.யூவுக்கு வரவேற்ற லோகேஷ் கனகராஜ்!
நேற்று ராகவா லாரன்ஸின் பிறந்த நாளையொட்டி பென்ஸ் படம் "லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில்" (எல்.சி.யூ) இணைகிறது என இதற்காக ஒரு அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் லோகேஷ் கனகராஜ் தோன்றினார். கைதி, விக்ரம், லியோ படங்களை தொடர்ந்து பென்ஸ் படமும் எல்சியூ.,வில் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புல்லட் கிளிம்ஸ்
டைரி பட இயக்குனர் இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் முதல் முறையாக ஹீரோவாக ராகவா லாரன்ஸ்-ன் தம்பி எல்வின் லாரன்ஸ் அறிமுகமாகிறார். இதில் வைஷாலி ராஜ், சுனில்,சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் அவரது தம்பிக்காக சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார் ராகவா லாரன்ஸ். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோவை ராகவா லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளனர்.
|
கால பைரவா
ராகவா லாரன்ஸின் 25வது படத்தை தெலுங்கில் கில்லாடி, வீரா போன்ற படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார். அவரது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு இப்படத்திற்கு "கால பைரவா" என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். அதில் இது "பான் இந்தியா சூப்பர் ஹீரோ பிலிம்" என குறிப்பிட்டிருந்தனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!