
லலித் மகன் படத்தில் சசிகுமாரா அல்லது விக்ரம் பிரபுவா?
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனர் லலித் குமார் தமிழில் மாஸ்டர், லியோ, கோப்ரா, மகான் போன்ற படங்களை தயாரித்தவர். சமீபகாலமாக இவரின் மகன் அக்ஷய் குமாரை கதாநாயகனாக ஆக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் லலித்.
தற்போது வெற்றி மாறனின் உதவி இயக்குநர் சுரேஷ் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார். இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சசிகுமார் மற்றும் விக்ரம் பிரபு என இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. யார் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகவில்லை.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!