
ராணுவ அதிகாரிகளுக்கு அமரன் படத்தின் சிறப்பு காட்சி திரையிடல்
தமிழ்நாட்டை சேர்ந்த வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் கதையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இதில் முகுந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார், அவரின் மனைவி கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இதனை நேர்த்தியான முறையில் படமாக்க பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் ராணுவ வீரர்களின் பகுதிகளில் படமாக்கியுள்ளனர்.
இதற்கு ராணுவ வீரர்களின் ஒத்துழைப்பு பெரிதளவில் உள்ளதால் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் டில்லியில் உள்ள சில முக்கிய ராணுவ அதிகாரிகளுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சியில் அவர்களுடன் இணைந்து சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியும் கண்டு ரசித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!