
தீபாவளி ரிலீஸ் படங்கள் : ஓடும் நேரம் எவ்வளவு?
இந்த ஆண்டில் இதற்கு முன்பு வெளியான சில படங்கள் இரண்டே முக்கால் மணி நேரம் கொண்ட படங்களாக இருந்தன. சில படங்கள் மூன்று மணி நேரம் வரையும் இருந்தன. ஆனால், அவை ரசிகர்களை சோர்வடைய வைப்பதாகவே இருந்தன. ரசிகர்களின் கமெண்ட்டுகளை வைத்து சில படங்களின் நேரத்தை பின்னர் குறைத்தார்கள்.
தீபாவளிக்கும் வெளியாகும் படங்களில் "அமரன்" படம் அதிக நேரம் ஓடக் கூடிய படமாக 2 மணி நேரம் 48 நிமிடங்களாகவும், "பிரதர்" படம் 2 மணி நேரம் 21 நிமிடங்களாகவும், "ப்ளடி பெக்கர்" படம் 2 மணி நேரம் 16 நிமிடங்களாகவும் இருக்கிறதாம்.
"அமரன்" படத்தின் நீளம் மட்டும் அதிகமாக இருக்கிறதே என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. அவ்வளவு நேரம் கடப்பது தெரியாமல் படம் விறுவிறுப்பாக நகர்ந்தால் எந்த சிரமமும் இல்லை. அப்படியே இருக்குமா மாற்றம் வருமா என்பது வெளியான பின்பு தெரிந்துவிடும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!