
பிளாஷ்பேக் : ஒரே படத்தில் சிவாஜி, ரஜினி, கமல்
1978ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த "சிவரஞ்சனி" என்ற படத்தை தெலுங்கு இயக்குனர் தாசரி நாராயண ராவ் தமிழில் நட்சத்திரம் என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்த படத்தில் ஸ்ரீபிரியாதான் கதையின் நாயகி, அவரது கணவராக மோகன் பாபுவும், காதலராக தெலுங்கு நடிகர் ஹரி பிரசாத்தும், நடித்தனர். இவர்களுடன் சிவச்சந்திரன், மனோரமா, ஜெயமாலினி நடித்திருந்தார்கள்.
படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிவாஜி, ரஜினி, கமல், நாகேஷ், பிரபா, சாவித்ரி, கே.ஆர்.விஜயா, ராதா, மஞ்சுளா, ஸ்ரீவித்யா, புஷ்பலதா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஸ்ரீப்ரியா, ஸ்ரீரஞ்சனி என்ற நடிகையாக நடித்திருந்ததால் முன்னணி நடிகர்கள் அனைவரும் அவர்களாகவே வந்து சென்றார்கள்.
படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தனர். "அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை..." என்ற புகழ்பெற்ற பாடல் இந்த படத்தில் இடம்பெற்றது. "பொன்னாங்கன்னி பூத்து வந்ததோ..." என்ற பாடலில் ஸ்ரீபிரியாவுடன் கமல் இணைந்து ஆடினார்.
திருமணமான ஒரு திரைப்பட நடிகைக்கு தனது ரசிகருடன் வரும் காதல் தான் படம்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!